இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கி இருக்கும் இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மறுசீரமைத்து நீட்டித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவால் வழங்கப்பட்ட அவசரகால உதவியாக சுமார் 4 பில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்பட்டது .

கவழங்கப்பட்ட குறித்த நிதியிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் தடையின்றி நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமாக அமைந்தது.

குறித்த  கடன் நிதியின் ஒரு பகுதி கடன் வரி மார்ச் மாதத்துடன் முடிவடையத் திட்டமிடப்பட்டது. அறிக்கையின்படி, இலங்கையின் பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, பேச்சுவார்த்தைகளின் பின்னர், கடன் வரி 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டது.

நாட்டின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இலங்கையின் கடன் வழங்கும் நாடுகள்  சந்திப்பிற்கு தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் சீனாவும் கலந்துகொள்ளுமா என்பதில் கவனம் திரும்பியுள்ளது.

ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வைத்திருப்பதால், மோடியின் பிரதமரின் கீழ் உலக வல்லரசாக மாறியுள்ள இந்தியாவிலிருந்து இலங்கை அரசாங்கம் கணிசமான உதவியை பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு