கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி!! -IRCC திட்டத்தின் மூலம் விவசாயம், உணவு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சி செய்தி!! -IRCC திட்டத்தின் மூலம் விவசாயம், உணவு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிப்பு-

கனடாவில் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த, வேளாண் மற்றும் உணவு துறைகளில் அனுபவமுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் பைலட் திட்டத்தை நீட்டிப்பதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வருடாந்திர தொழில்சார் வரம்புகளை நீக்குவதாகவும் ஐ.ஆர்.சி.சி (IRCC) அறிவித்துள்ளது.

இந்த வரம்புகளை நீக்குவது அதிக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பை ஐ.ஆர்.சி.சி (IRCC) வழங்குகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் கூடுதல் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக ஐ.ஆர்.சி.சி (IRCC) தெரிவித்துள்ளது.

இந்த வேளாண் - உணவு பைலட் திட்டத்திற்கான விண்ணப்ப காலக்கெடு எதிர்வரும் 14 ஆம் திகதிஅன்று முடிவடைகிறது.

இந்நிலையில், IRCC இன் அமைச்சர் சீன் ப்ரேசர் (Sean Fraser), இந்த வேளாண் - உணவு பைலட் திட்டத்தை 2025 ஆண்டு மே 14 அதிகதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

மே 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட இம் முன்னோட்ட திட்டம், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்களில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கு உதவுகிறது.

இறைச்சி பதப்படுத்துதல், காளான் மற்றும் கிரீன்ஹவுஸ் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க உதவும் நோக்கத்துடன் கனடாவின் இந்த விவசாய-உணவு குடியேற்ற பைலட் திட்டம் தொடங்கப்பட்டது.

முதலில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ​​அடுத்த 3 வருடங்களுக்கு வருடம்தோறும் 2,750 முதன்மை விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் 2,43,000க்கும் அதிகமானோர் விவசாயம், வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் வனவியல் துறையில் பணிபுரிகின்றனர் மற்றும் 14,000க்கும் மேற்பட்ட காலியான வேலைகள் உள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு