மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! 18 வயதான இளைஞன் பலி, மற்றொருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! 18 வயதான இளைஞன் பலி, மற்றொருவர் படுகாயம்..

கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டாவளைப் பகுதியில் இருந்து புளியம்பக்கடை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மாட்டுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானார்.

சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன. 18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞனே பலியாகியுள்ளார். 

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காகவும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு