ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்போம்! ஊடக அறிக்கையில் சம்மந்தன் திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்போம்! ஊடக அறிக்கையில் சம்மந்தன் திட்டவட்டம்..

ஜனாதிபதியுடன் மே 9ம் திகதி இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்குபற்றும் என அக்கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார்.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும் நாட்டுக்குள்ளேயும் 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை.

மேற்சொன்ன அடிப்படையில்தான் மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு