அதிக முறை டக் அவுட் ஆகி ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரோகித்

ஆசிரியர் - Editor II
அதிக முறை டக் அவுட் ஆகி ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரோகித்

மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான துடப்பாட்ட வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

சேப்பாக்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. நாணயசுழல்ச்சில் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் துடப்பெடுத்தாடியது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். 5 பந்துகள் மட்டும் சந்தித்த அவர் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் பந்தை பிடிகொடுத்து அட்டமிழந்தார்.

இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன துடுப்பாட்ட வீரர் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு