உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் பொருளாதார வளர்ச்சி!! -இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மோடி எடுத்துரைப்பு-

ஆசிரியர் - Editor II
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் பொருளாதார வளர்ச்சி!! -இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மோடி எடுத்துரைப்பு-

ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

 பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்த வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ ( உள்ளத்தில் உள்ளதை பேசுதல்) நிகழ்ச்சியின் 100 ஆவது நாள் நிறைவு நிகழ்வான கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நேரடி நிகழ்ச்சி கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவையும் மான் கி பாத்தின் நேரடி நிகழ்வை ஒளிபரப்பின.

மான் கி பாத் நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில், ஏற்றுமதி இலக்குகளை அடைய வேண்டுமாக இருந்தால், உள்ளூர் உற்பத்தியை உயர்த்த வேண்டும்.

உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி என்று தெரிவித்தார்.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கும் இதே மந்திரம்தான் பொருந்தும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையிலிருந்து ஏற்றுமதிகள் 2% குறைந்து 1,037 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு