புதிய உலக சாதனை படைத்த பிரபாத் ஜயசூரிய
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
7 டெஸ்ட் போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்தி அவர் இவ்வாறு உலக சாதனையை படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவர் தனது 50 ஆவது இலக்கை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.