SuperTopAds

தனது காதலி மீது சந்தேகம், பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய மாவட்டச் செயலக ஊழியர் கைது...

ஆசிரியர் - Editor I
தனது காதலி மீது சந்தேகம், பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய மாவட்டச் செயலக ஊழியர் கைது...

தன்னுடைய காதலியை பொலிஸ் கான்ஸ்டபிளும் காதலிப்பதாக நினைத்து அவரை தாக்கிய மாவட்டச் செயலக அபிவருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர்,

பேருந்தில் அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் காதலி என கூறப்படும் யுவதியுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் காதல் கொண்டுள்ளார் என சந்தேகநபர் தவறாக புரிந்து கொண்டு 

இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.