சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்

ஆசிரியர் - Editor II
சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்

இந்தியாவின் ஆந்திராவில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தீப் என்ற நபர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் சமந்தாவுக்கு தனது வீட்டில் சிலை வைத்து கோயில் ஒன்றை கட்டியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமந்தாவின் பிறந்தநாளான நாளை இந்த கோயில் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். கோயில் கட்டியதற்கான காரணத்தை அவர் கூறும்போது, பிரதியுஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை சமந்தா செய்து வருவதால், அதனை பாராட்டி இந்தக் கோயிலை கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், சமந்தாவை இதுவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமந்தாவின் கோயில் மற்றும் சிலை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு