புதிய சாதனை படைத்த திமுத் கருணரத்ன
இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணரத்ன அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தொடக்க வீரராக அதிக சதங்கள்
அயர்லாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. அணித்தலைவர் திமுத் கருணரத்ன 115 ஓட்டங்கள் விளாசினார்.
இது அவருக்கு 16 ஆவது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம் இலங்கை அணியில் அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முன்னாள் அணித்தலைவர் மார்வன் அதப்பத்து இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், திமுத் கருணரத்னே அவருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். இருவரும் 16 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் சனத் ஜெயசூரியா 13 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், திலகரத்னே தில்ஷன் 8 சதங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.