பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரேரணை தள்ளிவைப்பு

ஆசிரியர் - Editor II
பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரேரணை தள்ளிவைப்பு

பிரான்ஸ் நாட்டின் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், புலம்பெயர்தல் பிரேரணையை தள்ளிவைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரேரணைக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அப் பிரேரணையை நிறைவேற்றியது அரசு. அது தொடர்பான போராட்டங்கள் முற்றிலும் முடிவுக்குவந்ததுபோல் தெரியவில்லை.

இந்நிலையில், புலம்பெயர்தல் பிரேரணையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் (Elisabeth Borne), அந்த பிரேரணைக்கு போதிய ஆதரவு இல்லாததால், அதை இலையுதிர்காலத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

இப் பிரேரணை, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதை வேகப்படுத்தும் நோக்கிலும், பணியாளர் தட்டுப்பாடு நிலவும் துறைகளில் பணியாற்றுவோருக்கு குடியிருப்பு அனுமதி கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

அது குறித்து கருத்து வெளியிட்ட எலிசபெத், புலம்பெயர்தல் பிரேரணை குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல, அது பிரான்சில் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கக்கூடும் என்றார்.

ஆகவே, மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தான் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு