அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில் ஆளுநர் ஜீவன் அதிகாரிகளுடன் ஆய்வு..

ஆசிரியர் - Editor I
அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில் ஆளுநர் ஜீவன் அதிகாரிகளுடன் ஆய்வு..

கிளிநொச்சியில் அரச காணிகளின் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் 

மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு