மகனின் தாக்குதலில் தந்தை பலி, தாய் படுகாயம்! இன்று அதிகாலையில் நடந்த பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
மகனின் தாக்குதலில் தந்தை பலி, தாய் படுகாயம்! இன்று அதிகாலையில் நடந்த பயங்கரம்...

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி - மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த பிச்சைமுத்து இராமசாமி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த தந்தை, தாய் மகனுக்கு இடையில் 

இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வாய்தர்க்கம் ஏற்பட்டு , கைகலப்பு ஏற்பட்டதாகவும். அதன் போது மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் 

தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை தாயாரும், படுகாயமடைந்த நிலையில் 

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த தந்தையின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. 

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு