SuperTopAds

விண்வெளியையும் விட்டு வைக்காத அமெரிக்கா.. பாதுகாப்பு படையை உருவாக்க ட்ரம்ப் முடிவு

ஆசிரியர் - Editor II
விண்வெளியையும் விட்டு வைக்காத அமெரிக்கா.. பாதுகாப்பு படையை உருவாக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்க ராணுவத்தில் ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. இதற்கான ஆட்கள் சேர்க்கும் பணி விரைவில் நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரை படை, விமான படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது. இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான திட்டம் எல்லாம் தயார் அனுமதிக்கு மட்டும் காத்து இருப்பதாக கூறியுள்ளார்.

உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் விண்வெளியில் பிரச்சனை செய்யலாம். விண்வெளியை பிடிக்க போர் நடக்கலாம். எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் நம்மீது போர் தொடுக்க கூட வரலாம். இதை தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பணிக்காக இப்போது ஆள் எடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். பல எதிர்ப்புகளையும் மீறி பணிக்கு ஆள் எடுக்க அவர் முடிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விமான படையிலும், ராணுவத்திலும் அனுபவம் பெற்று, ஸ்பேஸ் போர்ஸில் சேர விரும்பும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால் இவர்கள், சாதாரண பயிற்சிகளை பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள். வித்தியாசமான தொழில்நுட்ப பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படும். இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும், புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இவர்கள் ஏலியனை மட்டும் சமாளிக்கும் படி இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு முதற்கட்ட பணியாக, விண்வெளியில் பூமியில் விழும் எரிநட்சத்திரங்களை தாக்கி அழிக்க பயிற்சி தர இருக்கிறார்கள். விண்ணில் இருந்து பூமியில் விழும் சில எரிநட்சத்திரங்கள், பூமியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வகையான தாக்குதலை முதலில் சமாளிக்க இருக்கிறார்.