சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு!
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு!
மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு 15.04.2023 இல் பாடசாலை வளாகத்தில் முதன்முறையாக இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வை பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து சுமார் 300 பேர் கலந்துகொண்டு இந்த இப்தார் நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், பொது சமூக அமைப்புக்கள், வர்த்தகர்கள், உலமாக்கள், விளையாட்டு கழகங்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக இந்நிகழ்வை அலங்கரிக்க வருகை தந்த முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி மைமூனா அஹமட் மற்றும் முன்னாள் பிரதேச செயலாளரும் முன்னாள் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ. எல். எம். சலீம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாகிப் மாவட்ட பொறியியளாளர் ஏ. எம். சாகிர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளரான ஏ.ஏல். எம். முக்தார் சிம்ஸ் கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா ஆசிரிய ஆலோசகர்களான ஏ. சஹரூன் மற்றும் ஏ. றாஸீக் முன்னாள் அதிபர்களான எம்.ஐ. ஏ. ஜப்பார் ஜனாப் ஐ.எல்.ஏ. ரஹீம் ஐ.எல். ஏ.மஜீட் சாய்ந்தமருது பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் எம். சம்சுதீன்
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் செயலாளரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் அதிபர்களாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யு.எல்.எம். அமீன் அல்பஹ்ரியா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசல் ஜி எம் எம் எஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் காரியப்பர் வித்யாலய அதிபர் ஏ. ஆரிப் அல் ஜலால் வித்தியாலய அதிபர் எம். சைபுதீன் அல்ஹிலால் வித்யாலயா அதிபர் யு.எல். நசார் றியாலுல் ஜன்னா வித்யாலயா அதிபர் ஏ.அன்சார் அல்மிஸ்பா வித்யாலய அதிபர் யு.எல்.ரசாக் பிரதி அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் நமது பாடசாலை ஆசிரிய ஆசிரியர்களும் பழைய மாணவ மாணவிகளும் பல அதிதிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் தலைமை உரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது மாளிகைகாடு உலமா சபை தலைவர் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி) பயான் ஒன்று நிகழ்த்தப்பட்டது.
பழைய மாணவர் சங்க செயலாளரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியை கூறி சலவாத்துடன் நிறைவு செய்தனர்.