உக்ரைன் இராணுவத்தின் தலை துண்டிப்பு!! -வெளியானது ரஸ்ய படைகளின் கொடூர மூகம்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் இராணுவத்தின் தலை துண்டிப்பு!! -வெளியானது ரஸ்ய படைகளின் கொடூர மூகம்-

உக்ரைனின் இராணுவம் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதை காண்பிக்கும்  அதிர்ச்சி வீடியோ தற்போது ஒன்று வெளியாகியுள்ளது.

கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட மிகவும் கொடுரமான வீடியோவொன்றாக அது உள்ளது.

அந்த வீடியோவில் உக்ரைன் இராணுவம் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுகின்றார். அதேவேளை காலில் வெள்ளை நிற பட்டியணிந்தவர்களும் காணப்படுகின்றனர். ரஸ்ய படையி;னர் காலில் வெள்ளை பட்டி அணிவது வழமை அவர்கள் ரஸ்ய மொழியில் உரையாடுகின்றனர்.

பின்னர் கையில் பெரிய கத்தியை வைத்திருக்கும் காலில் வெள்ளை பட்டி அணிந்த நபர் மஞ்சள்பட்டி அணிந்த நபரின் தலையை துண்டிக்கின்றார்.

உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான கிரெமினாவிற்கு அருகில் இ;ந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு