அதிரடி அரை சதம்!! -நிக்கோலஸ் பூரன் படைத்த சாதனைகள்-

ஆசிரியர் - Editor II
அதிரடி அரை சதம்!! -நிக்கோலஸ் பூரன் படைத்த சாதனைகள்-

ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஆர்.சி.பி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிய  போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்.சி.பி 20 பந்துப் பரிமாற்றங்களில் 212 ஓட்டங்களை குவித்தது. 213 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 23 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்துவிட்டது. 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 30 பந்தில் 61 ஓட்டங்களை குவித்தார். அதன்பின் காட்டடி அடித்த நிகோலஸ் பூரன் 15 பந்தில் அரைசதம் அடித்து, 19 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 62 ஓட்டங்களை குவிக்க, கடைசி பந்தில் இலக்கை அடித்து ஒரு இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப் போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவே அதிவேக அரைசதம் ஆகும். 

ஒட்டுமொத்த ஐ.பி.எல்.லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தை யூசுப் பதான் மற்றும் சுனில் நரைனுடன் பூரன் பகிர்ந்துள்ளார். 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். 

ஐ.பி.எல்.லில் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் 326.32 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் பூரன் 4-ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பாட் கம்மின்ஸ் (373.33) முதலிடத்திலும், ரெய்னா(348), யூசுஃப் பதான் (327.27) ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு