SuperTopAds

கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் கல்விப்பணிமனை மண்டபத்தில் இன்று  மாலை  நடைபெற்றது. 

சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி எம்.எச். றியால் (ஹாபீஸி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தவராசா கலையரசன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம். பி.எம். வாஜித், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல். அஸ்மி, உதவி ஆணையாளர் எம்.எஸ்.எம். அஸீம், பொறியலாளர்கள், கணக்காளர்கள், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,   சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.ஏ. உமர் மௌலானா, ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற பிரதி மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்கள், வலய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளின் அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு படையினர், கல்முனை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், மாநகராட்சி சபை நிறைவேற்று அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு வலயக் கல்வி பணிமனையின் கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையிலான குழுவினரின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.