பொன்னியின் செல்வன்-2 அடுத்த பாடல் இன்று வெளிவரும்

ஆசிரியர் - Editor II
பொன்னியின் செல்வன்-2 அடுத்த பாடல் இன்று வெளிவரும்

பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான சக்கைப் போடு போட்ட படம் பொன்னியின் செல்வன்-1. 

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ இன்று சனிக்கிழமை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு