கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பு
கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பவளவிழா நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்வும், இப்தார் வைபகமும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
புதன்கிழமை(05) மாலை உத்தியோகபூர்வ பவளவிழா இலட்சினையை திறந்து வைத்த பாடசாலை சமூகம் இந்த இலட்சிணையை பவள விழா இலட்சணையாக அறிவித்துள்ளது. மேலும் இவ்வருடம் முழுவதுமாக நோன்புப்பெருநாளை அடுத்து இரத்த தான முகாம்கள், பழைய மாணவர்களின் அணிகள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி, கலை, கலாச்சார நிகழ்வுகள், பிரமாண்ட பரிசளிப்பு, மேலங்கி அறிமுகம், சாதனையாளர் கௌரவிப்பு, பெண் பழைய மாணவிகளின் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.ஏ. அஸ்தர், ஏ.எஸ். சலாம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எல். ஹமீட், பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜிப்ரி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் அமைப்பின் பிரதிநிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.