நல்லிணக்க விசேட இப்தார் நிகழ்வு
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 150 மணித்தியால சிங்கள மொழி கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் செவ்வாய்க்கிழமை(4) மாலை ஏற்பாடு செய்தநல்லிணக்க விசேட இப்தார் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் பாடநெறியின் பிரதான வளவாளர் ஏ.எச். நாஸிக் அஹமத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், நிதி உதவியாளர் ஏ.எஸ்.எம் முஜாஹித் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நோன்பின் மகிமை பற்றிய இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் ஏ.எம். தெளபீக் (நழீமி) நிகழ்த்தினார்.
நிகழ்வின் இறுதியில் பாடநெறியை தொடரும் மாணவர்களின் சார்பில் ஏ.எச்.எம்.நிப்றாஸ் நன்றி உரையை நிகழ்த்தினார்.