நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!! -அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்-

ஆசிரியர் - Editor II
நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!! -அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்-

சென்னையில் நடக்கவுள்ள சி.எஸ்.கே அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த அரை மணி நேரத்தில் விற்று முடிந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது சீசன் வரும் 31 ஆம் திகதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.

இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி நடக்கிறது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா காரணமாக கடந்த 3 வருடங்களாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படவில்லை. அந்த வகையில் 3 வருடங்களுக்கு பின் சென்னையில் வரும் 3 ஆம் திகதி ஐ.பி.எல் போட்டி நடக்கிறது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 2 கவுன்டர்கள் அமைக்கப்பட்டது. கவுண்டர்கள் திறக்கப்பட்டவுடன் சுமார் அரை மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. 

இதற்கான நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கிச் சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு