சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி!! -நடவடிக்கை எடுக்காத பொலிஸ் மீது பொதுமக்கள் தாக்குதல்-
இந்தியாவின் தெற்கு கொல்கத்தாவில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலாவில் 7 வயது சிறுமி காணாமல் போனதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை தில்ஜாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்பந்தமாக அச்சிறுமியின் அயல் வீட்டாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தக் கொலையின் பின்னணி குறித்து பொலிஸார் எந்தவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நகரின் முக்கிய மேம்பாலத்தில் இருந்த பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். நேற்றிரவு போராட்டக்காரர்களால் பல போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இன்று திங்கட்கிழமை காலை முதல், போராட்டக்காரர்கள் தில்ஜாலாவில் பல சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை தற்போது கொல்கத்தா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.