SuperTopAds

யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை

ஆசிரியர் - Editor II
யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொடிச்சீலை

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலயகத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபுடையவர்களுக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  30ஆம் திகதி  பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.