SuperTopAds

யாழில். பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

ஆசிரியர் - Editor II
யாழில். பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளளார். 

சங்கானை பகுதியை சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் இரண்டு பிள்ளைகளும் பட்டதாரிகள். அவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை இருந்துள்ளார். 

அந்நிலையில் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரண விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்