நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்

வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்று சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தண்டிகையில் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்