SuperTopAds

மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு எனும் செயலமர்வு

ஆசிரியர் - Editor III
மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு எனும் செயலமர்வு

மாற்றுவழிப் பிணக்குத் தீர்வு (Alternative Dispute Resolution) எனும் தலைப்பில் சமூகங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்து சமூகப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும்  எனும் செயலமர்வு சம்மாந்துறை விளையாட்டுக்கழக கேட்போர் கூடத்தில்  இன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் செயற்படுத்தப்படும் towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) எனும் தலைப்பில் இளைஞர்கள், யுவதிகள்,பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு இடம்பெற்றது. 

இதன் போது சிறப்பு விருந்தினராக இச்செயற்திட்டத்தின் குழுத்தலைவர் ஜக் காஸ்டன், மாற்றுவழிப் பிணக்குத் தீர்வில் சிறப்பு வல்லுநராக இருக்கும் இந்திக்க பெரேரா, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் அஸாம் மற்றும் முஸ்லிம் Aid ன் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் சலீம், SEDR ன் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் பொனி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.