SuperTopAds

எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!! -மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!! -மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு-

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என 2019 மக்களை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளிலிருந்து அமலுக்கு வருகிறது என்று மக்களை செயலகம் தெரிவித்துள்ளது.

 2019 ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியிலிருந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.