மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்!! -ஆச்சரியத்தில் மக்கள்-

ஆசிரியர் - Editor II
மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்!! -ஆச்சரியத்தில் மக்கள்-

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையில், மனைவி ஈஸ்வரி கடந்த வருடம் காலமானார்.

மனைவி இறந்த துயரத்தில் இருந்த சுப்பிரமணி, அவரின் நினைவாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

அதன் பின்னர் ஆச்சரியமான விடயம் ஒன்றை செய்தார். அதாவது தனது 15 சென்ட் இடத்தில் மனைவிக்காக அவர் கோயில் கட்டியுள்ளார். அதில் 6 அடியில் மனைவிக்கு சிலை வைத்துள்ளார்.

இதற்காக அவர் 15 இலட்சம் செலவு செய்துள்ளார். இம்மாதம் 31 ஆம் திகதி மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதால், 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க உள்ளார் சுப்பிரமணி.

மனைவிக்காக கோயில் கட்டி தினமும் வழிபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு