சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்

ஆசிரியர் - Editor II
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்

சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான கோவை குணா தனது 60 ஆவது வயதில் இன்று காலமானார்.

அவர் சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சீரின்மையால் கோவை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து இவர் உயிரிழந்தார். இவரது உடல் கோவை, விலாங்கு குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. 

மேலும், நாளை புதன்கிழமை தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு