யாழ்.தீவக பகுதிகளில் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் என கூறி மோசடியில் ஈடுபடும் கும்பல்..! பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை..
யாழ்.ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் என கூறி மோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.
புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள்
உடுவில், கோப்பாய் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் மேற்படி சம்பவமம் இடம்பெற்றிருந்த நிலையில்
குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் ஊர்காவற் துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் np hz 3125மோட்டார் சைக்கிளில் நபரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும்,
எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில்
அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.