மோதலை தடுக்க சென்ற பெண் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்! மேலும் இருவர் படுகாயம், கொலையாளி தப்பி ஓட்டம்...
காணி தகராறினால் இரு தரப்பிற்கிடையே நடந்த மோதலை தடுக்க சென்றிருந்த 55 வயதான பெண் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பொல்பிதிகம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தல் 55 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காணி தகராறினால் ஆண் ஒருவரும் அவருடைய மகளும் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதனை அவதானித்த குறித்த பெண் அங்கு சென்று மோதலை தடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது ஏற்கனவே இருவரை தாக்கிக் கொண்டிருந்த நபர் குறித்த பெண்ணையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த தந்தை மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.