கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற இளம் குடும்ப பெண் கைகள் கட்டப்பட்டு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
தகராறினால் கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றிருந்த 27 வயதான பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்டு துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைகள் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் சண்டையிட்ட அவர்
தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ளது.