கனடாவில் இனி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!!

ஆசிரியர் - Editor II
கனடாவில் இனி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!!

கனடாவில் வாழ்பவர்கள் இனி முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், இது நடைமுறைக்கு வரும் என்று மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லிசா தெரிவித்துள்ளார்.

மெட்டா மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கனடா அரசால் முன்மொழியப்பட்ட பில் சி-18 என அழைக்கப்படும் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

கனடாவின் பெரிய ஊடக நிறுவனங்களும், மத்திய லிபரல் அரசாங்கமும் இந்த மசோதாவை ஆதரித்துள்ளன. இது தொழில் நுட்ப நிறுவனங்கள், ஊடகங்களைக் கையகப்படுத்தும் சூழலை மாற்றும் எனக் கூறியுள்ளனர்.

மெட்டா நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கைக்குப் பின்பு பேசிய பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் “ மீண்டும் ஒரு முறை, கனேடிய அரசாங்கத்திடம் நல்லெண்ணத்துடன் பணியாற்றுவதற்குப் பதிலாக முகப்புத்தகம் அச்சுறுத்தல்களை நாடியிருப்பது ஏமாற்றமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

நாங்கள் இடுகையிடாத இணைப்புகள் அல்லது செய்திகளுக்குப் பணம் செலுத்த எங்களை கட்டாயப்படுத்தும் ஒரு சட்டமன்ற கட்டமைப்பானது நீதிக்குப் புறம்பானது, எங்கள் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பொதுமக்கள் எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் " என்று மெட்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு