ஓஸ்கர் விருதை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல்
அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஓஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. முதல் ஓஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay) ஓஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.
சிறந்த பாடல் பிரிவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான 'நாட்டு நாட்டு' பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய்ஹோ" சிறந்த பாடலுக்கான ஓஸ்கரை வென்றது.