36 பந்தில் சதம்!! -வாணவேடிக்கையால் மைதானத்தை அதிர்ந்த வீரர்-

ஆசிரியர் - Editor II
36 பந்தில் சதம்!! -வாணவேடிக்கையால் மைதானத்தை அதிர்ந்த வீரர்-

பி.எஸ்.எல் தொடரில் முல்தான் வீரர் உஸ்மான் கான் 36 பந்துகளில் சதம் விளாசி மிரள வைத்தார்.

பாகிஸ்தான் லீக் தொடரின் நேற்று நடந்த போட்டியில் முல்தான் சுல்தான் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடினர்.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குவெட்டா அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி முல்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் உஸ்மான் கான் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாய் வெடித்த உஸ்மான், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

குறிப்பாக, கியாஸ் அகமது வீசிய இரு பந்துப் பரிமாற்றங்களை பதம் பார்த்த உஸ்மான், அவரது பந்துப் பரிமாற்றங்களில் மட்டும் 54 ஓட்டங்களை விளாசினார். மேலும் 36 பந்துகளில் சதம் அடித்தார். மறுமுனையில் குறைந்த பந்துகளை மட்டுமே ரிஸ்வான் எதிர்கொண்டார்.

எனினும் இவர்களது பார்ட்னர்ஷிப் 150 ஓட்டங்களை கடந்தது. மொத்தம் 43 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் 120 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 9 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு