SuperTopAds

யாழ்.நிலாவரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்ற இரு பொலிஸார் மதுபோதையில்! இருவர் மீதும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நிலாவரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்ற இரு பொலிஸார் மதுபோதையில்! இருவர் மீதும் நடவடிக்கை..

யாழ்.புத்துார் - நிலாவரை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேநபரை மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்த அழைத்துச் சென்ற பொலிஸார் இருவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் இருவர் விபத்தை ஏற்படுத்திய சாரதி ஒருவரை சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். டிப்பர் வாகனச் சாரதி மது அருந்தியிருந்தாரா?

என மருத்துவ அறிக்கை பெறுவதற்காக வந்திருந்த பொலிஸார் மது அருந்தியிருந்ததை அறிந்துகொண்ட சட்டவைத்திய அதிகாரி உடனடியாக சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார். 

தகவலின் அடிப்படையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.