புகைரதத்தின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக மீட்பு!
கொழும்பு - கோட்யைிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகைரதத்தின் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.