SuperTopAds

வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இரண்டாம் நாளில் பலம் பெற்ற இலங்கை அணி

ஆசிரியர் - Editor II
வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இரண்டாம் நாளில் பலம் பெற்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தமது வேகப்பந்துவீச்சாளர்களின் உதவியுடன் வலுப் பெற்றிருக்கின்றது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – நியூசிலாந்து அணிகள் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று  கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகியது.

மழையின் குறுக்கீடு காணப்பட்ட போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணி 305 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை இழந்து காணப்பட்டிருந்தது.

தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை போட்டியின் இரண்டாம் நாளில் விளையாடடிய இலங்கை அணியினர் 50 ஓட்டங்களை மட்டுமே மேலதிகமாக பெற்று எஞ்சிய இழந்து தமது முதல் இன்னிங்ஸை 355 ஓட்டங்களுடன் நிறைவு செய்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் அதன் தலைவர் டிம் சௌத்தி 5 இலக்குகளையும், மேட் ஹென்ரி 4 இலக்குகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 67 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இலக்கை இழந்தது. அந்த இலக்கை அசித பெர்னாண்டோ வீழ்த்தினார்.

அதனைத்த தொடர்ந்து லஹிரு குமாரவின் வேகப்பந்துவீச்சில் இரு இலக்குகள் வீழ்த்தினார்.  

அத்துடன் இந்த இரு வீரர்களது இலக்குகளின் பின்னர் நியூசிலாந்து 76 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை இழந்து தடுமாறியது.

நியூசிலாந்து அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 5 இலக்குகளை இழந்து 162 ஓட்டங்களுடன் தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.

அதன்படி தற்போது 193 ஓட்டங்கள் இலங்கையினை விட பின்தங்கியிருக்கும் நியூசிலாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் டேரைல் மிச்சல் 40 ஓட்டங்களுடனும், மைக்கல் பிரஸ்வெல் 9 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.

இலங்கை அணியினைப் பலப்படுத்திய இரண்டாம் நாளுக்கான பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 இலக்குகள் வீதம் சாய்த்திருக்க, கசுன் ராஜித ஒரு இலக்கை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.