காதலியை ஏமாற்றி இளைஞர்!! -ஏரியில் சடலமாக மீட்பு-

ஆசிரியர் - Editor II
காதலியை ஏமாற்றி இளைஞர்!! -ஏரியில் சடலமாக மீட்பு-

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரியான நிசாந்த் (வயது 28) என்பவருக்கும் வடபழனியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பாடசாலையில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. 

இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த நிலையில் நிசாந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 3 ஆம் திகதி திருமணம் நடக்க இருந்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண் உடனடியாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்தார்.

அதில் காதலன் நிசாந்த், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார். மேலும் அவர் 68 இலட்சம் ரூபா பணத்தையும் பெற்று திருப்பி தரவில்லை. எனவே நிசாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் நிசாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் நிசாந்த் மீது போக்சோ, மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

திருமணம் நிறுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் எந்தநேரமும் கைதாகலாம் என்பதால் நிசாந்த் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிசாந்த், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்வதாக "வாட்ஸ் ஆப்" மூலம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் போரூர் பகுதிக்கு வந்து பார்த்தபோது நிசாந்தின் கார் போரூர் ஏரிக்கரையில் நின்றது. எனவே அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. 

இதற்கிடையே இன்று காலை நிசாந்த் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது. 

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்து நிசாந்த்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை ஏமாற்றிய வாலிபர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு