SuperTopAds

மர்மமான முறையில் உயிரிழந்த 6 வயது சிறுமி! தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
மர்மமான முறையில் உயிரிழந்த 6 வயது சிறுமி! தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸார்..

6 வயது சிறுமி ஒருவர் நேற்று பிற்பகல் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் மற்றும் தாயின் துணையுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் துணையால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தையின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக குழந்தையின் 25 வயது தாயும், தாயின் துணையான 29 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.