SuperTopAds

விருந்துபசாரத்தின்போது நபர் ஒருவரை அடித்துக் கொன்ற 5 பேருக்கு மரண தண்டணை!

ஆசிரியர் - Editor I
விருந்துபசாரத்தின்போது நபர் ஒருவரை அடித்துக் கொன்ற 5 பேருக்கு மரண தண்டணை!

கடந்த 2014ம் ஆண்டு நபர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 5 பேருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 03.07.2014 அன்று கேகாலை - தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின்போது சீமெந்து கல்லினால் தாக்கி

 நபர் ஒருவரைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதனையடுத்தே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜயகி டி அல்விஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.