தப்பி ஓடுவதற்கு முயற்சித்த கைதி சுட்டுக் கொலை!
சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்த கைதி ஒருவர் சிறைச்சாலை பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.