SuperTopAds

அடுத்த சில வாரங்களில் எரிபொருள் விலை குறையும் என நம்பிக்கை!

ஆசிரியர் - Editor I
அடுத்த சில வாரங்களில் எரிபொருள் விலை குறையும் என நம்பிக்கை!

நாட்டில் அடுத்துவரும் சில வாரங்களில் எரிபொருட்களின் விலைகள் குறையும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலைகள் குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எரிவாயுவிலைகளும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.