SuperTopAds

அல்-ஹதீஜா பாலர் பாடசாலையின் விடுகை விழா

ஆசிரியர் - Editor III
அல்-ஹதீஜா பாலர் பாடசாலையின் விடுகை விழா

அல்-ஹதீஜா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் லாக்டோ மீடியா நெட்வொர்க் வருடாந்த திறமைக்கான தேடல் விருதுவிழா -2023

அல்-ஹதீஜா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும்  லாக்டோ மீடியா நெட்வொர்க் வருடாந்த திறமைக்கான தேடல் விருதுவிழா -2023 விழாவும் லக்ஸ்டோ மீடியாதலைவர் அன்ஸாரின் தலைமையில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில்  ஞாயிற்றுக்கிழமை(5) மாலை  இடம்பெற்றது.

நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த நிகழ்விற்கு  பிரதம அதிதியாக ஷரீப் பௌண்டஷன் தவிசாளரும் தொழிலதிபருமான கலாநிதி ஷரீப் ஹக்கீம்   கலந்து சிறப்பித்தார்.

பின்னர் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.பிரதம அதிதிகளின் உரை பரிசளிப்பு வைபவம் என தொடர்ச்சியாக இடம்பெற்றன.

 பிரதம அதிதி தற்காலத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை தொடர்பிலும்  பெற்றோர்கள் மத்தியில் வழங்கி இருந்தார்.

அத்துடன்  பாடலுக்கான நடனம் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.ஏனைய அதிதிகளாக ஐக்கிய காங்கிரஸ்தலைவர் முபாறக் அப்துல் மஜீட் கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் பிரபல ஆசிரியர்  ஏ.எம் அஹூவர் மற்றும் பல கல்விமான்கள் புத்திஜீவிகள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மேலும் பல திறமையான கலைஞ்சர்களை கௌரவிக்கும் வகையில் திறமைக்கான தேடல் விருது விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலங்களில் எமது பிராந்தியத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பிரமாண்டமான  கௌரவிப்பு நிகழ்வினை ஷரீப் பவுண்டேசன் ஊடக ஏற்பாடு செய்யப்படும் என்பதினை பிரதம அதிதி அவர்களினால் கூறப்பட்டதுடன்  திறமையான கலைஞர்களுக்கு  சான்றிதழ்களும் நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.