SuperTopAds

கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

ஆசிரியர் - Editor I
கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட - குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடைக்கு வந்து நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் கையிலிருந்து குழந்தை நழுவியபோதும், குழந்தை காயமின்றி தப்பியது.சந்தேக நபரை கைது செய்வதற்கு மத்தேகொட பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.