கணவருடன் தகராறு! ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் போட்டு கொல்ல முயன்ற தாய்...
கணவருடன் ஏற்பட்ட சண்டையினால் ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் போட்டு கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டிக்கு அருகில் அழைத்துச் சென்று இறால் தொட்டிக்குள் தள்ளியது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு குழந்தையை காணவில்லை என கூறி தேடியபோது அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி குழந்தை இறால் தொட்டியில் போராடுவதை பார்த்து அதில் குதித்து காப்பாற்றியதாக கூறினார்.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.