11 வயதான மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபர் கைது!
மாணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பலாங்கொட - பின்னவல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரான அதிபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷபிரயோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 50 வயதான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.