தோட்டத்திற்குள் நுழைந்த யானையை விரட்ட முயன்ற முதியவர் யானை தாக்கி பலி!

ஆசிரியர் - Editor I
தோட்டத்திற்குள் நுழைந்த யானையை விரட்ட முயன்ற முதியவர் யானை தாக்கி பலி!

மன்னார் மாந்தை மேற்கு - காயாநகர் ஈச்சளவக்கை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காணிக்குள் நுழைந்த யானையை விரட்ட முயற்சித்தவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

சம்பவதினத்தன்று உயிரிழந்தவரின் மனைவி, மகளின் வீட்டில் இருந்தமையால் இவர் தனது வீட்டில் தனியே இருந்துள்ளார். 

இதனால் வயோதிபர் யானைதாக்கி இறந்தது யாருக்கும் தெரியாது . இந்நிலையில் தந்தையின் நடமாட்டத்தை காணவில்லை என கூறி வீட்டுக்கு சென்றபோதே, 

தந்தை யானை தாக்கி உயிரிழந்தமை தொியவந்துள்ளது. அதன் பின்னர் அயலவர்களுக்கும் கிராம சேவகர் ஆகியோருக்கும் தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஈச்சளவக்கை பெரியமடு சாமித்தம்பி சிவஞானம் வயது 65 என்பவரே 

இதன்போது உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு