காணாமல்போயிருந்த யுவதி கடற்கரையில் சடலமாக மீட்பு!
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி ஒருவர் கற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சிசிடிவி கமராக்களை பரிசோதித்தபோது, அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்டபோதும்,
அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.